
ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வழங்கும் நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள் புது தில்லியில் இன்று வழங்கப்பட்டன.
சிறந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றாவது இடம் பெற்ற மதுரை மாநகராட்சிக்கு குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இணை அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல் மற்றும் பிஷ்வேஷ்வர் சிங் டூடு ஆகியோர் வழங்கினர். விருதினை மாண்புமிகு மதுரை மாநகராட்சி மேயர் திருமதி. வ. இந்திராணி, ஆணையளர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் இ.ஆ.ப. ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் மேலாண்மை, கழிவு நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை ஆராய்ந்த சிறப்பு வல்லுனர் குழு மதுரை மாநகரை சிறந்த மாநகராட்சிகளுள் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.